Recent Posts

Search This Blog

100 ரூபாய் பணம் தருவதாக தெரிவித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது

Friday, 24 November 2023


களுத்துறை - இங்கிரிய பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறுமிக்கு 100 ரூபாய் பணம் தருவதாக தெரிவித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பாறையை சேர்ந்த 67 வயதுடையவராவார்.

இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அண்மையில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



No comments:

Post a Comment