
தற்கொலை பயங்கரவாதிகளுக்கு நிகரான தாக்குதல் நடத்தி, நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவை மீட்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று (24) தெரியவந்துள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று (24) பிற்பகல் கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை நீதிமன்றில் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment