நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது அறிந்ததே..
போதைப்பொருள் கடத்தல்காரரான குற்றவாளி 'ஹரக் கட்டா' தப்பிச் செல்ல எடுத்த முயற்சிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
இவர் தொடர்பான தகவல் வழங்கினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம்: பொலிஸார் அறிவிப்பு | 25 Lakhs Reward For Announcement In Sri Lanka
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு - 071 8591960 பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நிலையத் தளபதி பிரிவு (1) - 0718596150
No comments:
Post a Comment