பேருவளையில் Maradana Charity அமைப்பு சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் அமைப்பாகும். அந்தவகையில் Maradana Charity அமைப்பின் இக்ரா கல்வி செயல்திட்டத்தின் இரண்டாவது வேலைத்திட்டமாக இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எழுதவுள்ள பேருவளை மருதானை அல்பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய மாணவிகளுக்கு இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கொன்றை அண்மையில் பாடசாலையில் ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பிரபல ஆசிரியர் ஷஹீல் காஸிம் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பேருவளை மருதானை அல்பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த ஐந்து மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பணப்பரிசில் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சித்தியடைந்த மாணவிகளின் பெயர் விபரம் வருமாறு,
01. அப்தா அஹ்ஸன் (166 புள்ளிகள்)
02. இம்ரா இஹ்ஸான் (159 புள்ளிகள்)
03. கதீஜா கியாஸ் (153 புள்ளிகள்)
04. நுஸ்கா நாஸிர் (147 புள்ளிகள்)
05. திக்ரா றிஸ்வான் (143 புள்ளிகள்)
இந்நிகழ்வில் Maradana Charity அமைப்பின் தலைவர் அப்துல் காதர் பாச்சா, பொதுச் செயலாளர் ரூமி ஹாரிஸ், உப தலைவர் அஸ்கர் ஹாரிஸ், இணைப்பாளர் நஜாத் நிஸாம் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கருத்தரங்கில் நடத்தப்பட்ட மாதிரி பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற முதல் 12 மாணவிகள் ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இக்கருத்தரங்கு தொடரின் ஏனைய கருத்தரங்கு பேருவளை மருதானை அல்பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலை, பேருவளை மஹகொடை ஐ.எல்.எம். ஸம்ஸுதீன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவ, மாணவிகளுக்கு இடம்பெறவுள்ளது.
பேருவளை மருதானை அல்பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையாகும். 1924 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இப்பாடசாலை அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment