இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவௌ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பம்பஹின்ன, சமனலவௌ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட வரும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு சமனலவௌ மற்றும் கல்தொட்ட பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்து தங்குவது, செல்ஃபி புகைப்படம் எடுப்பது, நீராடுவது, மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் முற்றாக குறித்த செயற்பாடுகளை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்
No comments:
Post a Comment