Recent Posts

Search This Blog

மசாஜ் செய்வதற்கு சென்ற வெளிநாட்டு யுவதி துஷ்பிரயோகம் - நபர் ஒருவர் பொத்துவில் பொலிஸாரால் கைது

Thursday, 31 August 2023


பொத்துவில் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் மசாஜ் செய்வதற்கு சென்ற 23 வயதுடைய வெளிநாட்டு யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



குறித்த வெளிநாட்டு யுவதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் பணியாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment