நெடுந்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தலைமையில் நடைபெற்ற
ஒருங்கிணைப்பு குழுக்
கூட்டத்தில் பொது
அமைப்புக்களால் சுட்டிக்
காட்டப்பட்டதுடன்
கால்நடை வைத்தியரின்
சிபார்சுகள் இன்றியும் உரிய
அனுமதிகள் இன்றியும் கன்றுகுட்டிகள் இறைச்சிக்
வெட்டப்படுவது
தொட ர்பில் ஆதாரங்களுடன்
சுட்டிக்காட்டப்பட்டன.
இவ்வாறு
சுட்டிக்காட்டப்பட்டதுடன்
பசுந்தீவாகிய நெடுந்தீவில்
எதிர்காலத்தில் கால்நடைகளை
பாதுகாக்க நயினாதீவில்
மாட்டிறைச்சி கடைகள்
இல்லாதது போன்று
நெடுந்தீவிலும் மாட்டிறைச்சி
கடைகளை மூடுமாறும்
கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன்
நெடுந்தீவில் இருந்து
கால்நடைகள் படகுகள்
மூலம் கடத்தப்பட்டும்
வருகின்றன அன்மையில்
கூட இவ்வாறு கடத்திச்
செல்லப்பட்ட கால்நடைகள்
மீட்கப்பட்டிருந்தன.
குறிப்பாக மிகவும்
வயது குறைந்த மாடுகள்
இறைச்சிக்காக வெட்டப்பட்டு
வருவதாகவும் அனுமதி
பத்திரத்தோடு ஒரு சில
மாடுகளும் ஏனைய மாடுகள்
சட்டவிரோதமாகவும்
வெட்டப்படுவதாகவும்
பிரதேச அமைப்புகளால்
பொதுமக்களாலும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment