Recent Posts

Search This Blog

கட்டிடம் ஒன்றினுள் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்பு.

Wednesday, 26 July 2023


மாத்தறை திஹாகொட பண்டாரத்தவெல்ல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட T56 துப்பாக்கி, ஒரு மகசீன், 10 T56 தோட்டாக்கள் மற்றும் 10 துரப்பண தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


No comments:

Post a Comment