Recent Posts

Search This Blog

Iஎன்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருகிறார்கள் - ஜெரோம் பெர்னாண்டோ

Friday, 26 May 2023
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


குற்றப் புலனாய்வு திணைக்களம் தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


பிரதிவாதிகள் தன்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அவர்களைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிரதிவாதிகளுக்கு வழங்குமாறும் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது


No comments:

Post a Comment