மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தராதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராஜாங்கனே சத்தரதன தேரரை 2023 ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரத்தில் வைத்து தேரரை பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
சக தேரரான பஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் வண. ராஜாங்கனே சத்தராதன தேரர் கருத்து வெளியிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இங்கிலாந்தை சேர்ந்த தனவந்தர் ஒருவரால் விகாரை கட்டுவதற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 8 கோடி ரூபா மாயமாகியுள்ளமை தொடர்பில் ராஜங்கனை தேரரின் வங்கிக்கணக்கை பரிசீலனை செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment