Recent Posts

Search This Blog

சஜித் தரப்பு 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக வெளியான தகவல்..

Thursday, 30 March 2023


ஐக்கிய மக்கள் சக்தியின் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன நேற்று (29) தெரிவித்தார்.



இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பல்வேறு வழிகளில் ஜனாதிபதிக்கு உடன்படிக்கையை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் என தனக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த எம்.பி.க்கள் குழு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.



இதேவேளை, காலியில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து வெளிநாட்டினரை பயமுறுத்தி சுற்றுலா வர்த்தகத்தை உடைக்க ஜே.வி.பி முயற்சிப்பதாகவும் லக்ஷ்மன் விஜேமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.



No comments:

Post a Comment