Recent Posts

Search This Blog

மாம்பழங்களை திருடிய 14 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது...

Wednesday, 1 March 2023


7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப் தோட்டத்தில் இவர்கள் திருடி உள்ளனர்.


திங்கட்கிழமை (27) வேனில் வந்து சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்திற்குள் நுழைந்து திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த தோட்ட உரிமையாளர் பிரதேசவாசிகளின் உதவியுடன் நபர்களை கைதுசெய்துள்ளார்.


கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரணை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்டவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவனும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment