ரஷ்ய குடும்பம் ஒன்று காட்டு யானையுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது அவர்கள் பயணித்த வாகனம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் ஹபரணை - பொலன்னறுவை பிரதான வீதியின் மின்னேரியா தேசிய பூங்காவிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதோடு, ரஷ்ய குடும்பம் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளது.
8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 10 மாதக் குழந்தையுடன் ரஷ்ய குடும்பத்தினர் வாடகை வாகனம் மூலம் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளனர்.
அவ்வேளை, மின்னேரியா தேசிய பூங்கா வீதியில் நிறுகொண்டிருந்த காட்டு யானையின் அருகில் சென்று செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது கோபம் அடைந்த யானை அவர்களை துரத்தியுள்ளது. உடனே அவர்கள் வாகனத்தில் ஏறி தப்பியுள்ளார்கள்.
கோபமடைந்த காட்டு யானை வாகனத்தை அடித்து நொறுக்கியதில் வாகனம் சேதமடைந்துள்ளது.
குறித்த குடும்பம் வாடகை வாகனம் மூலம் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் இந்த சம்பவத்தை சந்தித்ததாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment