Recent Posts

Search This Blog

தேர்தலை நடத்த என்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் ; 500 ரூபாய் பணத்தை அனுப்பிய இளைஞன்

Thursday, 23 February 2023


தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் எனத் தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தை ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்" என எழுதி, தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்


No comments:

Post a Comment