Recent Posts

Search This Blog

கம்பளையில் உள்ள தனியார் வங்கியின் ATM இயந்திம் கொள்ளை ; முகமூடி அணிந்த நான்கு நபர்கள் காவலாளியை கட்டி வைத்துவிட்டு துணிகர சம்பவம்.

Tuesday, 24 January 2023


முகமூடி அணிந்த நான்கு நபர்கள் இன்று அதிகாலை கம்பளையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ATM இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று நள்ளிரவு 12.40 மணியளவில் ATM இயந்திரத்தை கழற்றி அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வேனில் வந்த அவர்கள் வங்கியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியை கட்டி வைத்துவிட்டு ஏ.டி.எம் இயந்திரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.


சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், கம்பளை பொலிஸார் குழுவை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பேராதனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேனின் சாரதி வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment