Recent Posts

Search This Blog

Dubai இல் இடம்பெற்ற Law 2.0 நிகழ்வில் சிறந்த தலைமைத்துவத்திற்கான விருது கலாநிதி வி. ஜனகனுக்கு..

Sunday, 25 December 2022


சட்டக்கல்வித்துறையில் தலைமைத்துவத்துக்கான விருதினை பெற்றார் கலாநிதி வி ஜனகன்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற Law 2.0 கருத்தரங்கு மற்றும் விருதுவழங்கும் நிகழ்வில் சிறந்த தலைமைத்துவத்திற்கான விருதினை கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இக் கருத்தரங்கு மற்றும் சர்வதேச விருதுகள் வழங்கும் நிகழ்வு இந்த மாதம் 16 தொடக்கம் 18 வரை மூன்று தினங்கள் டுபாய் சர்வதேச நிழ்வுகளுக்கான நகரத்தில் இடம்பெற்றது. இந்த சர்வதேச விருதுகள் வழங்கும் நிகழ்வில் உலகில் பல பாகங்களில் இருந்து சட்டகல்விவழங்குனர்கள் பலரும் மற்றும் சட்ட வல்லுனர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விருத்தினை பெற்றுக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் இயங்கும் ஐடிம் சர்வதேச பல்கலைகழகத்தின் தலைவரும் இலங்கையில் நாற்பது வருடங்களாக உயர்கல்வியினை வழங்கிவரும் ஐடிம் நேசன்ஸ் கம்பஸின் தலைவருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தனது மகிழ்ச்சினை வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் கூறும்போது, இந்த விருதினை பெற்றுக்கொண்ட தருணம் மிகவும் பெருமையாக இருந்தது என்றும் இந்த விருதிற்கு தன்னை தெரிவு செய்த தெரிவுக்குழுவுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் சட்டத்துறை கல்வியினை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வழங்குவதில் தாம் அடைந்த வெற்றிக்கு இந்த விருது சான்றாக உள்ளது என மேலும் குறிப்பிட்டார். “எல்லாருக்கு சட்டக்கல்வி” என்ற தமது குறிக்கோள் நோக்கிய பயணத்தின் ஒரு மையில் கல்லாகவும் மேலும் ஒரு அங்கீகாரமுமாக இந்த விருதினை தாம் கருதுவதாக தமது கருத்தினை பதிவு செய்தார்.

இந்த நிழ்வில் உலகில் பல நாடுகளில் இருந்து சட்டத்துறை சார்ந்தோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதுபோல் இங்கு இடம்பெற்ற கருந்தரங்குகளிலும் சட்டம் மற்றும் நிதித்துறை சார்ந்த பல்வேறு சிறப்பு உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.




No comments:

Post a Comment