Recent Posts

Search This Blog

12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளுக்கு தந்தையான நபர், 4 மனைவிகளுக்கு மேல் யாரும் திருமணம் செய்யாதீர்கள் என உலகுக்கு அறிவுரை.

Tuesday, 27 December 2022




102 பிள்ளைகளுக்கு தந்தையான பின் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு 12 மனைவியரிடம் கோரிக்கை விடுத்த நபர்


ஆபிரிக்காவின் உகாண்டாவை சேர்ந்த மூசா ஹசாயா என்ற 67 வயது நபர், 12 மனைவிகள் மற்றும் அவர்களின் 102 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் தற்போது குடும்பக்கட்டுப்பாடு பற்றி பேசியிருப்பது, இணையத்தில் வைரலாகி வருகின்றது.


உகாண்டாவின் பகிசா நகரில் வாழும் மூசா ஹசாயாவுக்கு மொத்தம் 12 மனைவிகள் உள்ளனர். 12 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வாழும் இவருக்கு 102 பிள்ளைகள் உள்ளனர். முதன்முறையாக தன்னுடைய 16 வயதில், சரியாக 1971இல் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்திருக்கிறார்.


மிகவும் செல்வந்தரான மூசா, கிராமத் தலைவராகவும் பல தொழில் செய்தும் வந்துள்ளார். இதனால் தன் சொத்துக்களை விரிவாக்கம் செய்ய அவர் முடிவெடுத்திருந்திருக்கிறார். அதனால் அடுத்தடுத்து திருமணங்கள் செய்துள்ளார். தற்போது 68 வயதாகும் இவருக்கு 568 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் பலரின் பெயர் மூசாவுக்கு நினைவிலேயே இல்லையாம்.

அண்மையில் அவர் அளித்துள்ள செவ்வியொன்றில்,

“முதன்முதலில் நான் மறுமணம் பற்றி யோசித்தது, என் குடும்பத்தை பெருக்குவதற்காகத்தான். எனக்கு என் குடும்பத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. குடும்பத்தலைவராக இருந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் நிலத்தை உழுவதற்கும், மண் வளமானதாக இருப்பதால் குடும்பத்திற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கும் மண்வெட்டிகள் வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.


அப்படியே காலங்கள் ஓடின. நான் என் மனம் சொல்வதை மட்டுமே எல்லா காலத்திலும் கேட்டேன். எப்போதும் எந்த முடிவையும் வேகமாக நான் எடுத்ததில்லை. அதேபோல என் குடும்பத்தில் எல்லோரையும் நான் சமமாகவே நடத்தினேன். யாரையும் துன்புறுத்தியத்தில்லை.


தற்போது, என்னால் இதற்குமேல் ஒரு குழந்தையை கவனித்துக்கொள்ள முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.


அதனால் என்னுடைய எல்லா மனைவிகளையும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய கூறி அறிவுறுத்திவிட்டேன். இனி குழந்தையை சுமக்க வேண்டாமென கூறியிருக்கிறேன். இப்போது குடும்பத்தில் நிறைய உறவுகள் இருப்பதால், அனைவரையும் கவனித்துக்கொள்ளவோ படிக்க வைக்கவோ என்னால் முடியவில்லை. அரசின் உதவி எனக்கு வேண்டும்.


இனி வரும் சந்ததிகளுக்கும் நான் ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். 4 மனைவிகளுக்கு மேல் கல்யாணம் செய்யாதீர்கள். ஏனெனில் இங்கு எதுவும் நாம் நினைப்பதுபோல சூழல் மகிழ்ச்சியாக இல்லை” என்றிருக்கிறார்.



No comments:

Post a Comment