அல்ஹம்துலில்லாஹ், தற்போதைய பொருளாதார நெருக்கடி
நிலையில் அன்றாடம் உணவுத் தேவைகளுக்கு சிரமப்படும் குடும்பங்களுக்காக ஆங்காங்கே இனாமாக உலர் உணவுப் பொருட்களை உணவுப் பொதிகளை எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் பல தொண்டர் அமைப்புக்களால் செய்யப்பட்டு வருகின்றமை பெரும் ஆறுதலாக இருக்கின்றது.
தற்போதைய நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும் தமது இல்லாமையை வெளியே சொல்ல விரும்பாத மிஸ்கின் வர்க்கத்தினரும் அதிகம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களையும் மனதில் கொண்டு அவர்கள் கெளரவமாக விலை கொடுத்து வாங்கிச் செல்லக்கூடிய வகையில் 50% வீதமளவில் விலைக் கழிவில் பொருட்களை பண்டங்களை வாங்கியும் தனவந்தர்களிடமிருந்து பெற்றும் வழங்கும் ஏற்பாட்டை ஒவ்வொரு ஊரிலும் செய்ய முடியுமாயின் பல நன்மைகள் இருக்கின்றன.
தம்மிடமுள்ள சில பொருட்களை பண்டங்களை வீட்டுத் தோட்ட மிகை உற்பத்திகளை தந்துவிட்டு பண்டமாற்றாக சில பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியும்.
நெருக்கடி நிலை சற்று நீடிக்கும்
சாத்தியப்பாடு இருப்பதனால் முற்று முழுதான இலவச விநியோகங்களில் பல சவால்கள் ஏற்படக்கூடிய வாய்புக்கள் இருக்கின்றன.
எனவே இனாமாக தானதர்மங்களை செய்யும் அதேவேளை சலுகை அடிப்படையில் பொருட்கள் பண்டங்களை காய்கறி வகைகளை, தயாரித்த உணவு வகைகளை கொள்வனவு செய்கின்ற மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கின்ற பொறிமுறைகள் பற்றியும் சிந்திப்போம்.
இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள், கொள்ளை நோய்கள், அச்சம் பயம் பசி பட்டினி வறுமை உயிரிழப்புகள் என்பவை அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ள சோதனைகளாகும்.
பொருட்களை பண்டங்களை பதுக்கி விலையை உயர்த்தி ஊழல் மோசடிகள் செய்து பகற் கொள்ளை அடிப்போர் ஒரு புறம்..
தான தர்மங்கள் சதகா ஸகாத்துகள் இலவச உணவு விநியோகங்கள் என நன்மைகளை கொள்ளை அடிப்போர்கள் மறுபுறம்...
அவர்களில் இருந்து இவர்களை பிரித்தரியும் சத்திய சோதனையில் சரியான தரப்பில் நிலைத்திருக்க எம்மனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍🏻 22.06.2022 மீள்பதிவு SHARE
No comments:
Post a Comment