Recent Posts

Search This Blog

30 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் பள்ளத்தில் வீழ்ந்தது..

Tuesday, 27 September 2022


அனுராதபுரத்தில் இருந்து பொலனறுவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுஓய பகுதியில் நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ் சுமார் 30 பயணிகள் பயணித்துள்ளதுடன், காயமடைந்த 6 பயணிகள் ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment