Recent Posts

Search This Blog

ஒரு குடும்பத்தின் சராசரி வரிச்சுமை 28,000 ரூபாவாக உள்ளது

Sunday, 25 September 2022


சி.எல்.சிசில்-

நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். தற்போது ஒரு குடும்பத்தின் சராசரி வரிச்சுமை 28,000 ரூபாவாக உள்ளது என தாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.


நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரி முறை மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


“இலங்கையில் இன்னும் அதிக பணவீக்கம் உள்ளது. இந்தப் பணவீக்கத்துக்கு முக்கிய காரணம் அரசு விதித்துள்ள அதிக அளவு மறைமுக வரிகள் ஆகும். இது குறித்து ஆய்வு நடத்தினோம். அந்த ஆய்வின் மூலம், 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சராசரி வரிச்சுமை 42% அதிகரித்துள்ளது என்பது தெளிவாகியது. அதனால்தான் ஒரு சராசரி குடும்பத்தின் வரிச்சுமை 28,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.


மறைமுக வரி பகுப்பாய்வு மிகவும் முக்கியமானது, ஏனெனில் மறைமுக வரி பகுப்பாய்வு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை ஒரு வழியில் பாதிக்கிறது. மறுபுறம், ஒவ்வொரு நபரும் சேவைகள் மற்றும் பொருட்களைப் பெறும்போது அந்த வரிகளைச் செலுத்த வேண்டும்” என்றார்.



No comments:

Post a Comment