இலங்கையில் பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட விமானம் மற்றும் மீட்பு பணியாளர்களை ஈடுபடுத்த இலங்கை விமானப்படை தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவிவரும் மழையுடனான வானிலையால் நாட்டில், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்ல விமானப்படை தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்காக இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய விமானப்படை தளங்களில் இருந்து கண்காணிப்பு விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் விசேட பயிற்சி பெற்ற சிறப்புப் படைகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் படை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment