மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட பிரியாணி உணவில் கரப்பான் பூச்சி இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி பொதியை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளர் நேற்று (30) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்நிலையில், அவரை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25,000 ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.
குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் வைத்தியர்கள் சம்பவதினமான நேற்று (30) விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழி பிரியாணி வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பொதியில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் இருந்துள்ளது
இதனையடுத்து
மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக உரிமையாளரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கனகராசா சரவணன்
No comments:
Post a Comment