Recent Posts

Search This Blog

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு பலவந்தமாக பயன்படுத்தியதாக கூறி பொலிஸார் விசாரணை ஆரம்பம்.

Monday, 1 August 2022


கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூன்று அறைகளை பலவந்தமாக பயன்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பமானதில் இருந்து குறித்த குழு மூன்று ஹோட்டல் அறைகளையும் பலவந்தமாக பயன்படுத்தியதாக இந்த செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்தும் வாக்குமூலம் பெறப்பட உள்ளதுடன், ஹோட்டல் வளாகத்தில் உள்ள அறைகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து ஆர்வலர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கண்டறிவதும் இந்த விசாரணைகளின் நோக்கங்களில் ஒன்றாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment