பாராளுமன்றத்தில்
சுயாதீன அணியாக தம்மை
அறிவித்துக்கொண்டுள்ள
ஆளுந்தரப்பு
பங்காளிக்கட்சிகள்,
மேலும் சில கட்சிகளை
இணைத்துக்கொண்டு
எதிர்வரும் செப்டெம்பர்
மாதம் 4ஆம் திகதி,
‘வரலாற்று கூட்டணி' யை
உருவாக்கவுள்ளதாக சுயாதீன
அணியின் பாராளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29)
இடம்பெற்ற செய்தியாளர்
சந்திப்பில் அவர் இதனை
தெரிவித்துள்ளார். வரலாற்றில்
மிகப்பெரிய கூட்டணியாக
இது அமையும் எனவும்,
இந்த புதிய "வரலாற்று"
கூட்டணியை செப்டம்பர்
04 ஆம் திகதி, மஹரகமவில்
வைத்து அறிவிக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
இது ஒரு
முற்போக்கான, மக்கள் சார்பு
கூட்டணியாக இருக்கும்,
தற்போதைய நெருக்கடியை
சமாளிக்க மட்டுமல்ல,
எதிர்கால சவால்களுக்கும்
முகங்கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் அவர்
கூறினார்.
பொருளாதார நெருக்கடியில்
இருந்து மக்களுக்கு
எவ்வாறு உதவுவது என்பது
தொடர்பில் பாராளுமன்றத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும்
கட்சிகளின் தலைவர்களால்
ஒருமித்த கருத்துக்கு
வரமுடியவில்லை.
கட்சிகள்
நெருக்கடியைத் தீர்க்கும்
திட்டத்தைக் கொண்டு
வருவதற்குப் பதிலாக
அவர்களின் தனிப்பட்ட
நலன்களைப் பார்க்கின்றனர்
என்று அவர் குற்றம்
சாட்டினார
No comments:
Post a Comment