Recent Posts

Search This Blog

அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்பு ; எரிசக்தி அமைச்சர் i

Tuesday, 26 July 2022


உலக சந்தை விலைகளின்படி தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறையும் என்பதைக் காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனூடாக, அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதி எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment