Recent Posts

Search This Blog

சஜித் கூறியது போல் அவர் மூன்று நாடுகளிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்தால் நான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வேன்.

Monday, 27 June 2022
மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.

நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியினர் அரசியல் நடத்துவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.


No comments:

Post a Comment