
எரிபொருள் அடங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தருவது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என வலு சக்தி அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோலுடன் நேற்றைய தினம் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவிருந்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் குறித்த கப்பல் நாட்டினை வந்தடைவதற்கு மேலும் தாமதமாகும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் குறித்த தாமதத்திற்கு தாம் பொது மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த கப்பல் இன்றைய தினம் வருகை தருவது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment