Recent Posts

Search This Blog

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் பெரும் வெற்றி பெற முடியும் ; பசில் ராஜபக்ச

Thursday, 30 June 2022


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் பெரும் வெற்றி பெற முடியும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை கூட்டம் நேற்று முன்தினம் நெலும் மாவத்தை கட்சி காரியாளயத்தில் நடைபெற போது அங்கு கருத்து வெளியிட்ட போதே பெசில் ராஜபக்‌ஷ  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மாவட்ட அளவில் கட்சி அமைப்பாளர்களை மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து கட்சி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும், இதில் பெரும் வெற்றியை பெற்றுக்கொள்ள அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்சி உறுப்பினர்களுக்கு பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment