2015ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தது போன்று மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அண்மையில் தெரிவித்திருந்தது.
இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டாலும் தானே பிரதமர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக தம்மை பதவி நீக்கம் செய்வதற்கு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை போக்குவதற்கு பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை அகற்றிவிட்டு ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதே தீர்வு என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment