
எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அமைச்சர் கம்மன்பில பாராளுமன்றில் அறிவித்தார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது என தீர்மானிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் கம்மன்பில தற்போது ரஷ்ய யுக்ரைன் யுத்த சூழல் காரணமாக உலக சந்தையில் பாரிய எரிபொருள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த சூழலில் தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என கூறிய அவர் உலகில் எரிபொருளை மிகக்குறைவான விலைக்கு விற்பனை செய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கை 22 ம் இடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் கம்மன்பில இலங்கைக்கு மேலே இருக்கும் 21 நாடுகளும் எரிபொருள் வளம் கொண்ட நாடுகள் என கூறினார்.
மேலும் இந்தியாவில் இலங்கைவிட டீசல் விலை இரண்டு மடங்கு அதிகம் என அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment