மீயல்லை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் அல்-மினா தாயின் பிள்ளைகள்
இவ்வருடம் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை-2023 பெறுபேறுகள் அண்மையில் வெளி வந்தன. மீயல்லை அல்-மினா பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக 9A சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் மாணவன் தவ்லத் கான் அம்மார் யாஸிர். இதே போல் இவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் மிகவும் திறமை காட்டி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்-மினா வின் மாணவி எம்.ஏ. ஸுல்ஹா 8A சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஏனைய பல மாணவ மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். பல மாணவ மாணவிகள் மிகவும் கஷ்டமான பொருளாதார நிலையில் இருந்தும் கூட சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பரீட்சையில் திறமை காட்டி சித்தியடைந்து எமது கிராமத்துக்கு பெருமை சேர்த்தித் தந்த அனைத்து மாணவச் செல்வங்களையும் வாழ்த்தி மகிழ்கிறோம். மாணவர்களை சித்தியடைய வைப்பதில் பெரிதும் பங்காற்றிய அதிபர் உட்பட அனைத்து ஆசிரிய, ஆசிரியை களுக்கும் பெற்றோர்கள், ஊரார்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தென்மாகாண முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்
எம். ஜே முஹம்மத்


No comments:
Post a Comment