Recent Posts

Search This Blog

Iமிக்ஜாம் சூறாவளி : இலங்கைக்கான தற்போதைய அப்டேட்

Monday, 4 December 2023
வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 520 km தொலைவில் நிலைகொண்டுள்ள மிகவும் பலமிக்க மிக்ஜாம் சூறாவளியானது வட திசையினூடாக நகர்கின்றது.

இந்த சூறாவளியானது இன்று காலை சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தென் ஆந்திரப் பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மிக்ஜாம் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடைகின்றது.

புத்தளம் தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹமபாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.


No comments:

Post a Comment