
700 க்கும் மேற்பட்டவர்கள் பலியான பலஸ்தீன் ஆதரவு ஹமாஸ் குழுவின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு உதவுவதற்காக கிழக்கு மத்தியதரைக் கடலுக்குச் செல்லுமாறு ஃபோர்டு கேரியர் தாக்குதல் குழுவுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களில் அமெரிக்கர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் புதிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி கப்பலான USS Gerald R.Ford தற்போது மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்துள்ளது.


No comments:
Post a Comment