இலங்கையின் பிரபல நடிகர்
ஜக்ஸன் அந்தனி காலமானார்.
அவருக்கு வயது 65.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 14 மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேடை, சினிமா மற்றும் தொலைக்காட்சி துறைகளில் நடித்து இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தவர்.
2022 இல் அந்தனி மற்றும் அவரது இளைய சகோதரர் சமன் அந்தணி உள்ளிட்ட இருவர், அவர்கள் பயணித்த வாகனம் தலாவையில் காட்டு யானையுடன் மோதியதில் காயமடைந்துள்ளனர்.
கல்கமுவ, ஹத்திகுச்சி விஹாரையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது காட்டு யானை மீது வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.
விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், காட்டு யானையும் படுகாயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அந்தோணி, தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு மணித்தியால சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



No comments:
Post a Comment