Recent Posts

Search This Blog

இலங்கை குரங்குகளை வழங்குமாறு பல நாடுகளில் இருந்து கோரிக்கை

Thursday, 5 October 2023


பல நாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், சீனாவைத் தவிர பல நாடுகளின் தூதரகங்களில் இருந்தும் இந்தக் கோரிக்கைகள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து விலங்குகள் உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் மனு தாக்கல் செய்ததால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.



No comments:

Post a Comment