Recent Posts

Search This Blog

இன்று இடியுடன் கூடிய மழை குறித்த அறிவிப்பு வெளியானது.

Wednesday, 11 October 2023



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேல் மாகாணத்தின் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் சிறிதளவு  மழை பெய்யக்கூடும். காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

****************************

   

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். 


புத்தளம் தொடக்கம்  மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன் கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாகக் காணப்படும். 


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.



No comments:

Post a Comment