Recent Posts

Search This Blog

நீர் மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம்.

Thursday, 6 April 2023


நீர் மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அம்பாறை கொனாகொல்ல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டவர் அம்பாறை வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.



கடந்த 26ஆம் திகதி கொனாகொல்ல சந்தியில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவில் உடை அணிந்து விடுமுறை அறிவித்தல் விடுக்காமல் கலந்து கொண்டமை தொடர்பில், அவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் நேற்று (5) முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment