Recent Posts

Search This Blog

சமுதித சமரவிக்ரமவிடம் 500 மில்லியன் நட்டஈடு பாதுகாப்பு செயலாளர் வழக்கு தாக்கல் ..

Thursday, 6 April 2023


ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தன்னை அவமானப்படுத்தியதற்காக தலா 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி பாதுகாப்புச் செயலாளர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 


அசேல தர்மசிறி என்ற நபர் ட்ரூத் வித் சமுதித என்ற யூடியூப் சேனலின் ஊடாகவும், தனது முகநூல் கணக்குகள் ஊடாகவும் தம்மை இலக்கு வைத்து பல்வேறு அவதூறு விடயங்களை பரப்பியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


தனது நற்பெயருக்கும், இமேஜுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக கூறும் பாதுகாப்புச் செயலாளர், அந்த அலைவரிசையின் உரிமையாளரான சமுதித சமரவிக்ரமவுக்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தொடரப் போவதாகக் கூறுகிறார். 


இதேவேளை, ராவண லங்கா.எல்.கே என்ற இணையத்தளத்தினால் தம்மை அவமதித்ததாகக் கூறும் பாதுகாப்புச் செயலாளர், அந்த இணையத்தளத்தை நடத்துவதாக நம்பப்படும் ஜி.பி.நிஷங்கவிடம் 500 மில்லியன் ரூபா கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறுகிறார்.



No comments:

Post a Comment