Recent Posts

Search This Blog

14 வயதுப் பிரிவுக்கு உட்பட்ட மாணவன் அஹ்சான் 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவில் போட்டியிட்டு சம்பியன் ஆகி அசத்தல்.

Thursday, 6 April 2023


14 வயதுப் பிரிவுக்கு உட்பட்ட மாணவன் அஹ்சான் 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவில் போட்டியிட்டு சம்பியன்

இரத்தினபுரியில் வித்யாராஜா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி அதிபரின் தலைமையிலும் உடற்பயிற்சி ஆசிரியர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் 14.03.2023 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இதன் போது தரம் 8 இல் கல்வி கற்கும் 14 வயதுப் பிரிவுகளுக்கு உட்பட்ட மாணவன் எம்.ஏ.எம் அஹ்சான் 16 வயதுப் பிரிவில் 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டபோட்டியிலும் மற்றும் 18 வயதுப் பிரிவுகளுக்கு உட்பட்ட 100 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் கலந்துக்கொண்டு முதல் இடத்தை பெற்று சம்பியன் அடைந்துள்ளார்.


அதே போல் 20 வயதுப் பிரிவில் 100*4 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியிலும் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றுள்ளார்.

இம்மாண்வன் இவ்வாறு தன் அதிவேக ஒட்டத் திறமையை வெளிக்காட்டியது தொடர்பாக அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

14 வயது பிரிவில் போட்டியில் கலந்து கொண்டால் முதல் இடத்தை எப்படியும் பெற்றிருப்பார் எனினும் அவரின் திறமையை மேலும் முன்னேற்றவே இவ்வாறு போட்டியில் ஈடுபடுத்தி வெற்றியும் அடைந்துள்ளனர்.


இம்மாணவன் கால்பாந்து போட்டியிலும் ஓட்டப்போட்டியிலும் பயிற்சி பெற்று வரும் ஒரு திறமையான மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் பயிற்றுவிப்பாளர் Mr. இஷான், Mrs. காமினி அவர்களும் ஆவார்.

இம்மாணவன் விளையாட்டில் சாதிப்பதனையே நோக்கமாக கொண்டுளார். ரொனால்டோவை போன்று ஒரு சிறந்த கால்பந்து வீரராக வரேவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்று அம்மாணவன் குறிப்பிட்டார்.

இவர் அனீஸ் மற்றும் நிசாயா தம்பதிகளின் புதல்வனும் ஆவார். ஆரம்பத்தில் தனியார் பாடசாலையில் கல்வி கற்றார் எனினும் விளையாட்டில் ஈடுபாடு காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அத்துடன் பெற்றோர்கள் தற்போது கல்வி கற்கும் வித்யாராஜா கல்லூரியில் சேர்த்ததனை அடுத்து விளையாட்டில் அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக அஹ்சானின் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்திற்கும், விளையாட்டு பயிற்று விப்பாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

இம் மாணவன் விளையாட்டில் மட்டுமன்றி கல்வி கற்பதிலும் திறைமையுள்ள ஒரு மாணவனாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாணவனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.



தகவல்
ஆசிரியர் எம். எம் . எம் நுஸ்ஸாக்


No comments:

Post a Comment