Recent Posts

Search This Blog

வானிலை அறிக்கை : இன்று நாட்டின் பல பாகங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்ப்பு.

Wednesday, 16 November 2022



 மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். 


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய  சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று நிலைகொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் எதிர்வரும் 19 மற்றும் 20 ம் திகதிகளில் இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆனபடியினால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கை களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 35 km வேகத்தில் வட திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 







No comments:

Post a Comment