Recent Posts

Search This Blog

பாலியல் வன்கொடுமை மற்றும் உளவுபார்த்த குற்றச்சாட்டு.. மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை #துருக்கி

Thursday, 17 November 2022

 


 துருக்கி நாட்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் 8658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது.


துருக்கியை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (66) அவர் மதபோதகராக கருதப்பட்டார். ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார்.


அக்தார் பழமைவாத கொள்கைகளை ஆதரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பெண்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கி வந்துள்ளார்.


கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.


இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது



No comments:

Post a Comment