
அரசுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்
செய்பவர்கள் தேசத் துரோகிகள் என ஐக்கிய தேசிய கட்சி எம் பி வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் நாளை மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வஜிர அபேவர்தன…
நாட்டில் எரிபொருள், கேஸ் என வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் தற்போது நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் நாட்டை நெருக்கடிக்குள் தள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.
தற்போது எமக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் பரவாயில்லை குழப்பம் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment