Recent Posts

Search This Blog

நெதர்லாந்திடம் தென்னாபிரிக்கா அதிர்ச்சி தோல்வி- அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது.

Saturday, 5 November 2022


நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இன்று இடம்பெற்ற சுப்பர் 12 சுற்றின் மற்றுமொரு நெதர்லாந்து அணியிடம் தென்னாபிரிக்க அணி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

இதனூடாக, அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த தோல்வியின் ஊடாக தென்னாபிரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.


இந்த போட்டி மழையினால் பாதிக்கப்படாமல் இடம்பெறுமானால், இவ்விரு அணிகளில் வெற்றி பெறும் அணி, குழு 2இல் இந்திய அணியுடன் அரையிறுதிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment