Recent Posts

Search This Blog

தனுஷ்க குணதிலக்க, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ; இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிப்பு.

Saturday, 5 November 2022


சிட்னியில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், குணதிலக, நாளை
(7 நவம்பர் 2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ஐ.சி.சியால் அறிவிக்கப்பட்டதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தி உள்ளது.


இது தொடர்பில் நீதிமன்றத்தில் நடைபெறும் விடயங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உன்னிப்பாகக் கண்காணிக்கும்,

மேலும், ICC உடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும் மற்றும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கிரிக்கட் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment