Recent Posts

Search This Blog

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்து இளம் கணவன் - மனைவி மீது கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிய நபர்கள் - கணவன் பலி.

Wednesday, 30 November 2022


 கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ - வேவல பிரதேசத்தில் இன்று (30) காலை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்த இருவர், உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.


காரில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment