Recent Posts

Search This Blog

"இவ்வாறான தில்லுமுல்லுகளை செய்து வெற்றி பெறாமல் இந்தியா உலகக் கோப்பையை பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாமே"

Wednesday, 2 November 2022
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் T 20 உலகின் போட்டியின் அரை இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது.

ஆனாலும் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடுவர் இந்திய அணிக்கு சார்பாக சில தீர்மானங்களை மேற்கொண்டதனால் வெற்றி பெற்றது என்ற குற்றச் சாட்டு உள்ளது அறிந்ததே.


அதேபோன்று நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்தியா சார்பாக நடுவர்கள் செயற்பட்டமையினால் பங்களாதேஷும் தோல்வியை தழுவியது என்ற குற்றச் சாட்டும் உள்ளதுடன் இவ்வாறு நடுவர்களும் இந்திய அணிக்காக விளையாடியதாலே இந்தியா அரை இறுதி வரை முன்னேறி இருக்கின்றது எனவும்
மேலும் அதே போல் அரை இறுதிப் போட்டியிலும் நடுவர்களின் ஆட்டம் இந்தியாவுக்கு கைகொடுக்க இருக்கிறது எனவும் இந்தியா மீது பல குற்றச் சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வருகின்றன.


இது தொடர்பில் கிரிக்கெட் ஜாம்பவான்கள், கிரிக்கெட் ஊடகவியலாளர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்தியாவின் பிரபல விளையாட்டு ஊடகவியலாளர் ஒருவர் இந்தியாவின் இந்த செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் "இவ்வாறான தில்லுமுல்லுகளை செய்து வெற்றி பெறாமல் இந்தியா உலகக் கோப்பையை பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாமே" என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இந்தியராக இருந்தாலும் உண்மையை நேசிப்பவர்கள் இந்த வெற்றிகளை ஆதரிக்க மாட்டார்கள்.
✍️ Roomy Haris




No comments:

Post a Comment