Recent Posts

Search This Blog

சில பிரதேசங்களில் இன்றும் ஓரளவு பலத்த பலத்த மழையும் பெய்யலாம் என எதிர்பார்ப்பு.

Wednesday, 2 November 2022


இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழையும் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

பேருவலை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.


No comments:

Post a Comment