Recent Posts

Search This Blog

அரசு மருத்துவமனைகளில் பணம் இருப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க வேண்டும்.

Thursday, 3 November 2022


 அரசு மருத்துவமனைகளில் பணம் இருப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு  இலவச மருத்துவம் வழங்க  வேண்டும் என அரசு மருத்துவ அலுவலர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணமில்லாதவர்களுக்கு இலவசமாக மருந்து வழங்கும் முறையும், பணம் உள்ளவர்களிடம் மருந்துக்கு பணம்  வாங்கும் முறையும் அமல்படுத்தப்பட வேண்டும் என சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்தார்.



இதன் மூலம் இந்நாட்டில் சுகாதார சேவையை தொடர்ந்து பேண முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


மக்களின் வரிப்பணத்தில் இலவச சுகாதார சேவையை பேணுவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும் அது இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் எதிர்காலத்தில் அது நடக்கப்போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.


மேலும், பணம் உள்ளவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்து கிடைத்தால் அது அநியாயமான செயல் என்றும், பணமில்லாதவர்களுக்கு மட்டுமே இலவச மருத்துவம் என்ற முறையைத் தயாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.



No comments:

Post a Comment