பாதுகாப்பு அமைச்சு
ஜனாதிபதி வசமிருந்தாலும்
விசர் நாய்களைப் போல
பொலிஸாரை இயக்குவது
யார் என ஐக்கிய மக்கள்
சக்தியின் பாராளுமன்ற
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி தலைவர்
அலுவலகத்தில் நேற்று (11)
நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு
தொடர்ந்து உரையாற்றிய
அவர், போராட்டங்களை
அடக்கும்போது பொலிஸார்
சண்டியர்களைப் போல
நடந்துக்கொள்கிறார்கள்.
ஜனாதிபதி வசம்
பாதுகாப்பு அமைச்சு
இருக்கிறபோதிலும், விசர்
நாயைப்போல பொலிஸார்
நடந்து கொள்வதற்கு
யார் கட்டளைகளைப்
பிறப்பிக்கிறார்கள்?
பொலிஸாரை இயக்குவது
யார்? எனவும் கேள்வி
எழுப்பினார்.
அரசியல்வாதிகளின்
கைபொம்மையாகி, நாட்டு
மக்களின் ஜனநாயக ரீதியான
உரிமைகளைப் பறிக்கும்
செயற்பாடுகளில் பொலிஸார்
ஈடுபட வேண்டாமென
பொலிஸ் திணைக்களத்தின்
உயர் அதிகாரிகளிடம்
தெரிவிப்பதாகவும் கூறினார்.
களுத்துறையில்
நடைபெற்ற மொட்டுக்
கட்சியின் கூட்டத்தில்
முன்னாள் பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவின் உடைகளை
அவிழ்த்துவிட்டதாகவும்
தெரிவித்தார்.



No comments:
Post a Comment