75 வருட வரலாற்றினைக் கொண்ட பல அறிவுஜீவிகள்,உயர் பதவிகள் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் அடங்கலாக ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மாணவர்களை நாடெங்கும் பரந்து பட்ட ரீதியில் தன் வசம் கொண்டுள்ள பறகஹதெனிய தேசிய கல்லூரியில் சமீப காலத்தில் உத்தியோக பூர்வமாக நிறுவப்பட்ட பழைய மாணவர் சங்க வகுப்பு பிரதிநிதிகள் கலந்துரையாடலின் (Batch Representatives Meeting) முதற் கட்ட நிகழ்வு 25/09/2022,ஞாயிற்றுக்கிழமை,பறகஹதெனிய MM Reception Hall இல் வெகு விமரிசையாக நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு குருணாகல் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்.சகோ ஸலாஹுதீன்,பறகஹதெனிய தேசிய பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் சகோ.அப்துர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டதோடு தமது ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் வழங்கி ஆதரவளித்திருந்தனர்.அத்துடன் பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பிற்கிணங்க பாடசாலையின் 1986 க.பொ.த(சா/த) முதல் 2018 க.பொ.த ( சா/த) வகுப்புகளைச் சேர்ந்த வகுப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
பழைய மாணவர் சங்கத்தின் குறிக்கோள்,வேலைத்திட்டங்கள்,அதில் பழைய மாணவர்களின் பங்களிப்பு போன்ற விடயங்கள் சம்பந்தமாக சங்கத்தின் உப தலைவர் சகோ.சுஹைல் ஆசிரியர் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டதுடன்,பழைய மாணவர் சங்கத்தில் அனைத்து பழைய மாணவர்களும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment